Sunday, May 8, 2011

மே 1 - போலி உழைப்பாளர் தினம்


பஞ்சுமெத்தை தேவை இல்லை, நீ

படுக்கும் முன் உறங்கிடுவாய்

உண்டு களைத்தவனில்லை நீ

விழித்தால் பசித்திடுவாய் 


உன் மேனி பொன் மேனி

உன் வயிறு என்றென்றும் அரை வயிறு

உனக்கு பெரிய நோய் நொடி வைத்திய அலைச்சலில்லை

உன்னைப்பெற்றவள் மகராசி

உன்னை கட்டியவள் மகாராணி

கூட இருப்பவனை குழி பறித்து குதூகலிக்கும் வேலையல்ல உன் வேலை

20% மானவர்களின் சந்தோஷ வாழ்க்கைக்கு  80% மானவர்களின் அற்பணிப்பு

மே 1 மேலே தலைப்பாகி விட்டது

மே 11ல் உறுதி உறுதி எடுப்போம்

உன் உழைப்பை உரிச்ச மாட்டோம்

நியாய கூலியில் பேரம் பேசமாட்டோம்

உன் கை பற்றி நடை கற்று உழைக்க வேண்டும் இச்சமுதாயம்